Search This Blog

Thursday, November 8, 2012

விடுதலை

திரு. அன்ரன் பாலசிங்கம் ஒரு வார இதழுக்கு எழுதிவந்த தொடரை ”விடுதலை” என்னும் புத்தகமாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றனர்.  எழுதியது பாலசிங்கம் என்பதால் நிறைய தகவல்கள் கிடைக்குமென்ற ஆர்வத்தில் படிக்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. விடுதலைபுலிகளின் ஆரம்பக்கட்ட நிலை, தமிழக அரசியல், சக புலிகள் குழுக்களின் கருத்துவேறுபாடு, எம்.ஜி.ஆர் - விடுதலைபுலிகளின் உறவு, இந்திய - விடுதலைபுலிகளின் முரண்பாடு என பல விசயங்களை பேசி, ராஜீவ் - பிரபா ரகசிய ஒப்பந்தத்துடன் விடுதலை புலிகளின் சம்மந்தமான எழுத்து முடிவடைகின்றது. 63ம் பக்கத்துக்குமேல் மனிதம், தத்துவயியல், ஆன்மீகம் என்ற மற்ற விசயங்கள் ஆரமிக்கின்றது. 1987ஐ கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

பல ஹீரோ மாஸ் படங்களில் ஹீரோவைக் காட்டிலும் சில குணச்சித்திர நடிகர்களின் நடிப்பு நம்மை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த மாதிரி, விடுதலைப் புலிகளின் வரலாறைப் படிக்க போய், அன்றைய காலத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல், அவரின் முக்கியத்துவத்தையும், இன்றைக்கு அவர் சார்ந்திருக்கும் கட்சி, அவரின் இன்றைய நிலையை பற்றி யோசிக்கும்போது அவரைவிட அவர்மேல் எனக்குத்தான் பரிதாபம் வந்தது. எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே :(

வெறும் 63 பக்கம்தான். 1 மணி நேரம் ஒதுக்கினால் படிச்சிடலாம். 1983 லிருந்து 1987வரை விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் எவ்வாறு கோலோச்சினார்கள் என்பதை விரிவா விளக்கிருக்கரு திரு. பாலசிங்கம்.

No comments:

Post a Comment