Search This Blog

Thursday, November 8, 2012

நிலமெல்லாம் இரத்தம்


பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அதே மாதிரி இந்த புத்தகத்துக்கு விளக்கம் கொடுத்தால் என்னைவிட
அறிவிலி யாரும் இல்லை. பா.ராகவனோட வாசகன்னு சொல்ல நான் பெருமைப்பட வேண்டிய புத்த்கங்களுள் இதுவும் ஒன்று.

இதை எழுதும்போது நான் அசோகன் அண்ணன்கிட்ட பேசினதுதான் எனக்கு ஞாபகம் வருது. பைபிளையோ அல்லது குரானையோ 100 வாட்டி படிச்சாலும் ஒரு கிறிஸ்தவ/இஸ்லாமியனோட உணர்வ என்னால புரிஞ்சிக்க முடியாது. அதே மாதிரி ஓரிறைக் கொள்கையுடைய எவராலும் இந்துக்களின் சிலைவழிபாட்டையோ அல்லது மத நம்பிக்கைகளையோ முற்றிலும் உள்வாங்க முடியாது. அதற்கு காரணம் தான் அடிமனதில் புதைந்துகிடக்கும் தன் மதத்தின் மீதான சுயபட்சதாபம் & வீட்டில் குழந்தையிலிருந்தே ஒப்பிக்கப்பட்ட நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்கள். இதையும் தாண்டி ஒருவரால் சிந்திக்க முடிந்தால்தான் அவரால் மத சகிப்புத் தன்மையுடன் சிந்திக்க முடியும். அதை தவிர்த்து இணையத்தில் சொல்லப்படும் விளக்கங்களோ பொதுக்கூட்டங்களின் மூலம் மதத்திலுள்ள சந்தேகங்களுக்கான விளக்கமோ தீர்க்க முடியாதுன்னு சொன்னேன்.

ஆனால் அதையும் தாண்டி, தான் வார இதழுக்கு எழுதிய தொடரின் மூலம் ஒரு மதத்தின் ஆதார கொள்கை, நம்பிக்கை, பின்புலம், கலாச்சாரம், புவியியல் கூறுகளை பிற மதத்தவர் எளிதில் உணர்ந்துகொள்ளக் கூடிய முறையில் எழுதியவர் பா.ரா.

நிலமெல்லாம் இரத்தம் முழுக்க முழுக்க இஸ்ரேல் - பாலஸ்தீனுடான அரசியல் பிரச்சனை. அப்படி மேம்போக்காக சொன்னால் படிப்பவர்களுக்கு என்றைக்குமே தீர்க்கப்படாமல் போகும் இந்த பிரச்சனையை உள்வாங்குவது கடினம். இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனையின் அணிவேர் புவியியலையும் தாண்டி இரு மதங்களுக்குள்ளான பங்காளி பிரச்சனை என்பதை எல்லாருக்கும் புரியும் படியும், இஸ்லாத்திற்கும் சீயோனிய யூத மதத்திற்கும் ஜெருசலேம் மீதான மோகம் எதற்கு என்பதை இந்த புத்தகத்தைவிட வேறு எந்த புத்தகத்தாலும் இவ்வளவு எளிமையாக சொல்லியிருந்திருக்க முடியாது. பொது தளத்தில் அரபு நாடுகளைப் பற்றியோ அல்லது இஸ்ரேல் - அமெரிக்க ஏகாப்த்தியம் ஏன் அரபுநாடுகளின் மீது வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதனையும், ஈரான், ஈராக - அமெரிக்கா மற்றும் ஏனைய அரேபிய நாடுகளின் அரசியலை பேசுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

யாசர் அராபத், பி.எல்.ஓ, ஹமாஸ், இஸ்ரேல் vs எகிப்து, சிரியா, லெபனான், ஜோர்டான் நாடுகளின் யுத்தம், இரண்டாம் உலக்கப்போர், லேண்ட் பேங்க், ஜெருசலேமை கைப்பற்ற அரேபிய - கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போர் என புத்தகம் நெடுகிலும் ஏராளமான வரலாறுகளை தொட்டு சென்றிருப்பார். படிக்க படிப்ப பிரமிப்பாகவும், சலிப்பில்லாம் இருக்க புத்தகம் முழுவதும் நகைச்சுவை கலந்தும் எழுதியிருப்பார்.

இஸ்லாம் பற்றி புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச புரிதலை ஏற்படுத்தியிருந்தார். இஸ்ரேல் - பாலஸ்தீனர்களின் பிரச்சனையை மிக நுண்ணியமாக ஆராய்ந்து எழுதியிருந்தார். ஒருகாலத்தில் இணையத்தில் உலாவும் பல இஸ்லாமியர்களால் இந்த புத்தகம் அதிகமானோருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த விசயங்கள்:

* யூதர்களின் தவறுகளை கடுமையாக சாடினாலும், அவர்களின் ஒற்றுமை, அயராத உழைப்பு, பல அழுத்தங்களிலும் அவர்களின் நம்பிக்கை ஆகியவற்றை பாராட்டியே எழுதியிருப்பார்.

* இந்த புத்தகத்தை படிச்சதும் நானும் ஹிஸ்புல்லாக்களில் சேரணும்னு தோணிச்சி. அந்தளவு அவர்களை புகழ்ந்து எழுதியிருப்பார். அவர்களைப்பற்றிய மேலதிக தகவல்களுக்கு மாயவலை படிக்கவும். அது அடுத்த இழையில்.

* பி.எல்.ஓக்களின் அரசியல் ரீதியான போராட்டம், யாசர் அராபாத்தின் அயராத போராட்டம் & உறுதியான முடிவெடுக்கும் திறமை ஆகியவற்றைப் பார்க்கும்போது நமக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்கலியேன்னு ஏக்கம் வர்ற அழவுக்கு எழுதியிருப்பார்.

* பிலெல்.ஓ - ஹமாஸின் இன்றைய அரசியல்நிலை அவர்களுக்குள்ளான மோதலை கடுமையாக கண்டித்திருப்பார். பொதுவா எந்தஒரு எழுத்தாளர்களோ சமூக அரசியல் பேசுறவங்களோ இதைப் பற்றி எழுதுறதில்லை. குறிப்பா பாலஸ்தீனத்திற்கு சுற்றுலா சென்றுவந்த முத்துகிருஷ்ணன் இந்த சோத்துமூட்டையை பிரித்து பார்க்கவில்லை. ஆனால் அதை மிக வெளிப்படையாக தனது புத்தகத்தில் ஆவணப்படுத்தியவர் பாரா. புத்தகத்தை இரவு பகலாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன் 2009ல்.

வில்லன் ஏற்கனவே இங்கு அணைத்து பாகங்களையும் பகிர்ந்திருந்தார்.

No comments:

Post a Comment