Search This Blog

Thursday, November 8, 2012

ஒரு மோதிரம் இரு கொலைகள்:

எழுத்தாளர் திரு. கோனன் டாயில் எழுதிய ஆங்கில நாவல். தமிழில் மொழிபெயர்த்தவர் கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. பத்ரி ஷேசாத்ரி. நாவலைப் பற்றியும் அதை எழுதியவரைப் பற்றியும் முக்கியமாக நாவலின் கதாநாயகனைப் பற்றியும் பத்ரி அதிகமாகவே புகழ்ந்து எழுதிருந்தார். கொடுத்ததுக்கு மேலை கூவுறாரேன்னு படிச்சேன். உண்மையிலேயே நல்ல நாவல். பத்ரி எழுதியதில் மிகையில்லை. நாவலைப் பற்றி நான் புதிதா ஒன்னும் சொல்லப் போறதில்லை. பத்ரி எழுதியதையே இங்கு பதிக்கிறேன்.

ஷெர்லாக் ஹோம்ஸ் சாதாரணமான துப்பறியும் ஆசாமி இல்லை. ஒரு சகாப்தத்தின் தொடக்கப்புள்ளி. துப்பறியும் கலை என்றால் என்ன என்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கதை எழுதுபவர்களுக்கும் காவல்துறைக்கும் கற்றுக்-கொடுப்பவர். யாராலும் கண்டுபிடிக்கமுடியாத ஒன்றை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், ‘நீ என்ன ஷெர்லாக் ஹோம்ஸா!’ என்று ஒருவர் புகழும் அளவுக்கு இவரது பெயர் உலகப் பிரசித்தம். இவர் உதித்தது 1887-ல். அன்றுமுதல் இன்றுவரை எத்தனையோ துப்பறியும் நாயகர்கள் ஏகப்பட்ட கதைகளில் வந்துவிட்டனர். ஆனால் யாருமே ஹோம்ஸ் அளவுக்கு புத்திசாலிகளாக இருந்ததில்லை.

ஹோம்ஸ், ஒரு ஜேம்ஸ் பாண்ட் கிடையாது. பெண்களை மயக்கும் ஆணழகன் கிடையாது. அதிரடி ஓடிப்பிடித்தலில் ஈடுபடமாட்டார். டிஷூம் டிஷூம் சண்டை போடமாட்டார். தடதடவென மெஷின் கன்னால் சுட்டு நூறு பேரை வீழ்த்த மாட்டார். சர்வதேசத் தீவிரவாதிகள் பற்றிய கவலையில் அவர் மூழ்கிவிடவில்லை. அவர் காலத்தில் அப்படி ஒரு ஜாதியே இருக்கவில்லை.

ஆனால் கெட்டவர்கள் இருந்தனர். தனிமனிதக் குற்றங்கள் பரவியிருந்தன. ஆனால் அவர் கூ க்ளக்ஸ் க்ளான் போன்ற அமைப்புகளுடனும் மோதியுள்ளார். அவரது பரம எதிரி பேராசிரியர் மொரியார்ட்டி, ஒரு பெரும் குற்றக் கூட்டத்தின்
தலைவன். ஆர்தர் கோனன் டாயில் என்ற ஸ்காட்லாந்துக்காரர் மருத்துவம் படித்தவர். மருத்துவராகப் பணியாற்றவும் செய்தார். ஆனால்

அதில் அவருக்குப் பெரிய திறமை இருந்திருக்க முடியாது; பெரிதாகச் சம்பாதிக்கவும் இல்லை. ஓய்வு நேரத்தில் அவர் இந்தக் கதைகளை எழுத ஆμம்பித்திருக்கவேண்டும். டாயில் எழுதிய முதல் கதை A study in Scarlet பெரு வெற்றி பெற்றது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் அவரது இரண்டாவது நெடுங்கதை The Sign of the Fourஅவருக்குப் பெற்றுத் தந்த பேரும் புகழும் பிரமிக்கத்தக்கது. இதன் காரணமாக, டாயில் மருத்துவத் தொழிலுக்கே மூட்டைகட்டிவிட்டு, முழுநேர எழுத்துக்கு வந்துவிட்டார். டாயில் நிறையக் கதைகளை எழுதினார். அனைத்தும் ஷெர்லாக் ஹோம்ஸை வைத்து எழுதப்பட்டவை அல்ல. ஆனால், இன்று டாயிலின் புகழுக்குப் பின் இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் மட்டுமே.

டாயிலின் காலத்துக்கு முன்னரே துப்பறியும் கதைகள் ஆரம்பித்தி ருந்தன. முக்கியமாக, எட்கர் ஆலன் போ, எமில் கபோரியா ஆகியேணிணிμக் குறிப்பிடவேண்டும். டாயிலே தனது முதல் ஹோம்ஸ் கதையில் இவர்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களது நாயகர்களைவிடத் தனது நாயகன் மிகத் திறமை வாய்ந்தவன் என்று சொல்லிவிடுகிறார். அது உண்மையும்கூட.

டாயில், தனது முதல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை - A Study in Scarlet - ஒரு தொடர்கதையாக உருவாக்கினார். இந்தக் கதையில்தான் ஷெர்லாக் ஹோம்ஸும் அvaraது இணைபிரியா நண்பர் டாக்டர் ஜான் வாட்சனும் அறிமுகம் ஆகிறார்கள். ஜான் வாட்சன் நமக்குச் சொல்வதாகத்தான் இந்தக் கதைகள் அனைத்துமே அமைந்துள்ளன.

17-ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில்ல் அறிவியல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. ஆனால், 19-ம் நூற்றாண்டைத்தான் நிஜமான பகுத்தறிவின் ஆண்டாகச் சொல்லவேண்டும். பிரிட்டனில் அறிவியல், கணிதம் ஆகிய துறைகள் பட்டொளி வீசிப் பறந்தன. அறிவியல் அறிவைக் கொண்டு மனித வாழ்வை மேம்படுத்த உதவும் கருவிகளைச் செய்யமுடிந்தது. போருக்கான ஆயுதங்களையும் செய்யமுடிந்தது. நீராவிகைக் கொண்டு இரயில்கள் ஓட ஆμம்பித்தன. ஆலைகள் இயங்கின. மின்சாரமும் பெட்ரோலினாலால் இயங்கும் கார்களும் பரவ ஆரம்பிப்பதற்கு சற்று முன்பான காலகட்டம் இது. அறிவியலும் பொறியியலும் கொண்டு எதனையும் சாதித்துவிடலாம் என்று ஐயரோப்பிய மனம் நவீன காலத்துக்குள் நுழையும் நேரம்.

அந்த நேரத்தில்தான் டாயில் ஷெர்லாக் ஹோம்ஸை நமக்கு அறிமுகப்படுத்தினார். ஷெர்லாக் ஹோம்ஸ் மூளையை நம்புபவர். ஏற்கெனவே நடந்த சில விஷயங்களைப் பற்றிய தகவல்களைச் சொன்னால், அடுத்து என்ன நிகழும் என்பதை யார் வேண்டு- மானாலும் சொல்லிவிடலாம். ஆனால் முடிவாக நடந்த ஒன்றைச் சொன்னால், அதற்குமுன் என்னவெல்லாம் நடந்துள்ளன என்பதைக் கண்டுபிடிப்பதுதான் சிரமம். இதனைச் செய்வதற்கான பயிற்சியை தனக்குத்தானே அளித்துக்கொள்கிறார் ஹோம்ஸ்.

லண்டன் மட்டுமல்ல, பிரிட்டனிலும் ஐயரோப்பிய நாடுகள் பலவற்றிலும் ஏதேனும் குற்றங்கள் நடந்திருந்தால், அந்தக் குற்றங்களை வேறு யாராலும் கண்டுபிடிக்கமுடியாவிட்டால் கடைசிப் புகலிடம் ஷெர்லாக் ஹோம்ஸ்தான் என்ற ஒருபெருமையை டாயில் தன் கதைகளில் உருவாக்கினார். ஹோம்ஸ், குருட்டாம்போக்கில் குற்றங்களைத் துப்பறிவதில்லை. தட்டுத் தடுமாறி துப்புகளைப் பிடிப்பதில்லை. பல
விஷயங்களைச் சொந்தமாகப் படித்து, சோதனை செய்து, கற்றுக்கொண்டிருக்கிறார். காலடித் தடங்களை கவனமாகப் பார்த்து அவரால் பல விஷயங்களை உறுதியாகச் சொல்லிவிட முடிகிறது. உதிர்ந்து கிடக்கும் சாம்பலைப் பார்த்த மாத்திரத்திலேயே அது எந்த பிராண்ட் சிகரெட் அல்லது சுருட்டு என்று அவரால் திட்டவட்டமாகக் கூறமுடிகிறது. விஷங்கள் பற்றிய அறிவு அவருக்கு அத்துப்படி. சிறு மண் தீற்றலைக் கொண்டு, அந்த மண் லண்டனின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதைஅவரால் தீர்மானிக்க முடிகிறது. இவையெல்லாம் புருடா இல்லை; எந்த மனிதனும் வேண்டிய அளவு சாதகம் செய்தால் இந்தத் திறனைப் பெற்றுவிடலாம் என்பதுதான் டாயில் நமக்குச்சொல்ல விரும்பியது. எல்லாவற்றுக்கும் மேலாக, கம்ப்யூட்டர்கள் என்றால் என்ன என்று மனிதன் தெரிந்துகொள்வதற்கு முன்னதாகவே ஹோம்ஸ்,

சொந்தமாக ஒரு டேட்டாபேஸ் வைத்திருந்தார். குற்றங்களின் டேட்டாபேஸ். உலகில் அனைத்துக் கொடிய செயல்களும் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன என்பது அவரது வாதம். எங்கு என்ன குற்றங்கள் நடந்தாலும் அவர் அதன் செய்தித்தாள் துண்டை எடுத்துச் சேகரித்து வைப்பார். இண்டெக்ஸ் செய்துவைத்திருப்பார். புதிய குற்றம் ஒன்று நடந்த தகவல் கிடைத்துவிட்டால், உடனே இண்டெக்ஸைப் பார்ப்பார். ஆகா! இதுகோபன்ஹேகனில் நடந்த கொலை மாதிரி உள்ளதே என்பார். ஹோம்ஸ் எப்போதாவதுதான் துப்பாக்கியை நம்புவார். அப்போதும்கூட அவரது தோழர், ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர் ஜான் வாட்சன்தான் பிஸ்டலை எடுத்துவருவார்.
இத்தனைக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் காவல்துறையில் வேலை செய்பவர் அல்லர். அமெச்சிர் துப்பறிபவர்தான். ஆனால் காவல்துறையினர் பலரும் அவரது சேவையை நாடி வருவர்.

ஹோம்ஸை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவருவது, அவரது ‘மனத்தைப் படிக்கும்’ கலை. நீங்கள் அவர் முன் உட்கார்ந்தாலே உங்கள் முகத்தையும் உடலையும் உடையையும் பார்த்து, நீங்கள் யார், என்ன வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், இப்போது மனத்தில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் மனத்தை வாட்டும் கவலை என்ன என அனைத்தையும் ‘சரியாக’ சொல்லிவிடுவார். நாடி ஜோஸியக்காரர் அல்லர் அவர். பகுத்தறிவினால்தான் இதனைச் சாதிக்கிறார். எப்படிச் செய்கிறார் என்பதையும் வாட்சன் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸ் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் சாக்லேட் மாதிரி. ஒன்றைச் சாப்பிட்டுவிட்டால் மீதம் உள்ள அனைத்தையும் விடாமல் சாப்பிடத் தோன்றும்.

அவர் நான்கு நெடுங்கதைகளை எழுதியுள்ளார். 56 சிறுகதைகள். வரும் சில மாதங்களில் இவை அனைத்தையும் நீங்கள் தமிழில் படிக்கப்போகிறீர்கள். ஹோம்ஸ் என்பவர் நிஜமா, இல்லை முழுக்க முழுக்க ஓர் எழுத்தாளரின் கற்பனையில் உதித்த
பாத்திரமா என்று புரியாமல் நீங்கள் குழம்பிப்போவீர்கள். அதுதான் எழுத்தாளரின் வெற்றி.

***

No comments:

Post a Comment