Search This Blog

Thursday, November 8, 2012

அறிவு மஞ்சரி

குறுந் தகவல்களைக் கொடுக்கும் பொது அறிவு நூல். எழுதியவர் திரு. இராமசாமி சிறிஸ்கந்தராசா (வெள்ளவத்தை - இலங்கை). பல தகவல்கள் சுவாரஸ்யமாவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அதில் குறிப்பிட்டதை மட்டும் இங்கே எழுதுறேன். இந்த புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு 2005. கடந்த 8 ஆண்டுகளில் சிலவை மாறுதலுக்குட்பட்டிருக்கலாம்.

* கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடாத ஒரே நாடு - சவுதி அரேபியா.

* புகை பிடிக்காதவர்களே அமைச்சராக பதவியேற்கும் நாடு - லித்துவேனியா.

* போலிஸ்காரர்கள் மீசை வைத்துக்கொள்ள அனுமதிக்காத நாடு - பிலிப்பைன்ஸ்.

* உலகில் முதன் முதலில் கண்வங்கியை ஆரமித்த நாடு - இலங்கை.

* தாடி வைத்துக்கொள்ள அரசாங்கத்திடம் லைசன்ஸ் வாங்க சட்டம் உள்ள நாடு - ருமேனியா.

* பூமியிலிருந்து வானவில்லை பார்க்கும் நமக்கு அரைவட்டமாக தெரியும். அதே நேரம் வானத்தில் பயனிக்கும் விமானிக்கு முழு வட்டமாகத் தெரியும்.

* 1 லிட்டர் கடல் நீரைக் காய்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும்.

* காய்கறிகளிலும், பழங்கங்களிலும் விட்டமின் “டி” இல்லை.

* நேபாள நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நேசனல் பஞ்சாயத்து.

* போதி மரம் என்று அழைக்கப் படுவது அரச மரம்.

* உலகிலேயே பெண்கள் சதவிகிதம் மிகக் குறைந்தநாடு - ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 32 1/2% (அப்பிடியா அண்ணாச்சி??)

* ஃப்ரான்ஸ் நாட்டு இராணுவ வீரர் ஓய்வு பெறும் வயது - 30.

* பர்மாவில் ஓடும் ஐராவதி நதி காலையில் மேறு நோக்கியும், மாலையில் கிழக்கு நோக்கியும் பாயும்.

* திருக்குறளில் “குறிப்பறிதல்” என்கிற அதிகாரம் ஒரே பெயரில் இரண்டுமுறை வருகின்றது.

* திருப்பாவை & திருவெம்பாவை தாய்லாந்து மன்னரின் முடிசூடும் விழாவில் பாடப்படுகின்றது.

* பத்திரிக்கைகளே வெளிவராத நாடு - திபெத்.

* தாலிபான் என்பதற்கு ஆப்கானிஸ்தான் மாணவஎ இயக்கம் என்று பொருள்.

* சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி தனித்தனியாக 900 பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம்.

* சினிமாவுக்கு சென்சார் இல்லாத நாடு ஃப்ரான்ஸ்.

* ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் 007 என்பது, சட்ட பூர்வமாக கொலைசெய்யும் அதிகாரத்தை குறிப்பது.

* 30க்கும் மேற்பட்ட இயக்குனர்களின் முதற்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் முரளி.

* முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்த திரைப்படம் - மதில்கள் (மலையாளம்).

* முதல் முதலில் தமிழில் “ஏ” செர்டிஃபிகட்டோட வெளிவந்த திரைப்படம் - மம்ம யோகி (எம்.ஜி.ஆர்).

* 1000 படங்களுக்குமேல் நடித்தி கின்னஸில் இடம்பிடித்த ஒரே நடிகை - மனோரமா.

* 15 மொழிகளில் பாடிய ஒரே பிண்ணனி பாடகி - எல்.ஆர்.ஈஸ்வரி.

* துருக்கி நாட்டு படங்களுக்கு முத்தக் காட்சிகளுக்கு அனுமதியில்லை.

* சீறாப் புராணத்தில் அகமது என்று முகமது நபியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழ் இசைக்கு “கர்நாடக சங்கீதம்” என் பெயர் சூட்டியது சோமேஸ்வர பூலோக மல்லன்.

* ஸட்ஜம், ரிஷபம், காந்தம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாந்தம் ஆகிய ஏழு இசைக்கலை பிரிவின் முதல் எழுத்துக்களே ச,ரி,க,ம,ப,த,நி.

* தமிழில் கணவனை இழந்தவள் விதவை. மனைவியை இழந்தவன் தபுதாரன்.

* திருக்குறள் பதினெணதம் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று.

* மணிமேகலையில் புத்தத்தை போற்றியும், சமணத்தை குறைகூறியும் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது.

* பசுவின் கொம்பிலுள்ள வளையங்கள் அது ஈன்ற குட்டியின் எண்ணிக்கையை குறிக்கின்றன.

* கழுகு கூடுகட்டி வாழும் மரம், அதன் எச்சம் பட்டே அழிந்துவிடும்.

No comments:

Post a Comment