Search This Blog

Thursday, November 8, 2012

வந்தார்கள் வென்றார்கள்


பல நூற்றாண்டுகளாக சிதறிக்கிடந்த இந்திய துணைக்கண்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை உண்டாக்கியவர்கள் மொகலாய மன்னர்கள். மொகலாய ஆட்ச்சியையும் ஆட்சியாளர்களையும் பள்ளிப் பாடத்தில் படித்திருந்தாலும், அதினினும் கொஞ்சம் தமிழில் விளக்கமாகத் தந்தவர் கார்ட்ரூனிஸ்ட் திரு.மதன்.  ஜூனியர் விகடனுக்காக 53 வாரங்களாக எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்” தொடர்தான் இது. அவர் அதற்காக 18 புத்தகத்தை ஆராய்ந்து எழுதியிருந்தார். அவற்றில் பாபர் தனது கைப்பட எழுதிய பாபர் நமா என்பதும் அக்பர், ஹூமாயுன் போன்றவர்களை நேரடியாக பார்த்து எழுதிவத்த வரலாற்றின் புத்தகங்களும் அடக்கம்.

பாபர்:

மொகலாய சாம்ராஜ்யத்தை நிருவிய ஒரு மாபெரும் மன்னர் ஆவார் (பாரசீக மொழியில் ”மொகல்” என்றால் மங்கோலியர் என்று அர்த்தம்). இவர் கடந்து வந்த பாதைகள் அவ்வளவு கடினமானது. துருக்கிய மன்னர் தைமூரின் பரம்பரையில் வந்த உமர் ஷேக் மிர்ஸா என்ற சிற்றரசருக்கும், மங்கோலிய மாவீரல் செங்கிஸ்கானின் நேரடிப் பரம்பரையில் வந்த குத்லூக் நிஹார் என்ற பெண்மனிக்கும் பிறந்தார்.

பெயர்: திரு. பாபர்

வயது: 48 (கி.பி 1482 முதல் டிசம்பர் 26, 1530)

இராஜ்ஜியம்: ஆஃப்கானிஸ்தான், இன்றைய பாகிஸ்தான், பின் இந்தியா (வட இந்தியா மட்டும்).

சரித்திர நிகள்வு:

1. டிசம்பர் 15, 1526 பாபரின் படை சிந்து நதியினைக் கடந்து தௌலத்தான், மற்றும் சில முஸ்லீம் சிற்றரசர்களை வென்று முல்வட் கோட்டையை கைப்பற்றினர்.

2. ஏப்ரல் 21, கி.பி 1526 வரலாற்று சிறப்பு மிக்க பானிப்பட்டு போர் துவங்கியது. இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 பேர். ஒரு லட்சம் இருக்கலாம் என யூகிக்கின்றனர். ஆனால் ஆதாரம் இல்லை. போர் அரை நாளைக்குள் முடிவுக்கு வந்தது. (முதன் முதலில் துப்பாக்கி பயன் படுத்தியது இந்த போரில்தான். பாபரின் படையில் துப்பாக்கி இருந்தது).

3. போரில் இறந்த இந்திய குவாலியர் மன்னர் விக்ரம்ஜித்தின் குடும்பத்தினர் தங்களின் உயிரை காத்துக்கொள்ள பாபரின் மகனான ஹூமானிடம் ஒரு பரிசு கொடத்தார்கள். அதுதான் உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம். (கோஹினூரின் மதிப்பு: அதை விற்றால், அந்த பணத்தி உலகிலுள்ள எல்லாருக்கும் 2.5 நாள் உணவு அளிக்கலாம்).

சாதனைகள்:

1. இவர் காலத்தில்தான் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. கண்டு பிடித்தவர் உஸ்தாத் அலி.

2. டெல்லியிலும், ஆக்ராவிலும் பூங்காக்களை அதிகளவில் அமைத்தார்.

3. முதன் முதலில் டைரி, சுய சரிதை எழுதும் முறையை பழக்கப் படுத்தியவர்.

4. மைல் கற்களை அறிமுகப் படுத்தினார்.

5. பீரங்கிகளை அரிமுகப் படுத்தியவர்.

6. முதன் முதலில் மொகலாய சாம்ராஜ்ஜியத்தை நிருவியவர்.
 
குறைபாடுகள்:

1. கணக்கில் கொள்ள முடியாத அளவுக்கு இருந்த டெல்லி கஜானாவை காலி செய்தார். அதாவது, அணைத்தையும் ஆஃப்கானுக்கு அனுப்பினார்.

2. இவரது ஆட்சியில் கட்டடகலை நலிவுற்றது. (சில மாளிகைகளும், இரண்டு மசூதிகளை மட்டுமே கட்டினார். இப்பொழுது அவை எதுவுமே இல்லை)

3. அவரது ஆணைப்படி அயோத்தியில் மீர்பாக்கி என்ற தளபதி கட்டிய மசூதி. அதுவும் இப்பொது இடிக்கப்பட்டு விட்டது.

துணுக்கு:

1. பாபரின் உடல் யமுனை நதியின் அருகே புதைக்கப் பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பின் அவரின் உயிலின்படி ஆஃப்கானில் உள்ள, அவர் அமைத்த தோட்டத்தில்லே கொண்டு புதைத்தனர்.

2. மத மாற்றத்தை இவர் வலியுருத்தவில்லை. தனது பிள்ளைகளுக்கும் அதையே முன்மொழிந்தார்.

3. குடி பழக்கத்திற்கு அடிமையான இவர், அந்த பழக்கத்தாலே நோயுற்று இறந்தார்.

4. இந்தியாவில் முதன் முதலின் புனிதப் போரை அறிமுகப் படுத்தியவர்.

5. இந்துக்களின் நம்பிக்கையான ”பசு வதையை தடையை” சரியாக பின் பற்றியவர்.

6. இந்தியாவை நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.

ஹூமாயூன்: (மொகலாய இரண்டாம் அரசர்)

பாபருக்கும், மாகிம் பேகம் என்பவருக்கும் பிறந்த 9 தாவது குழந்தை (மீதி எட்டும் இறதுவிட்டது. மொத்தம் 17 குழந்தைகள்). மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாம் அரசர். பாபர் உருவாக்கிய சாப்ராஜ்ஜியத்தை இழக்காததொன்றுதான் குறை, மற்றபடி உடன் பிறப்புகளின் தொல்லைகளால் அல்லோல் பட்டு, மீண்டும் சாப்ராஜ்ஜியத்தை அமைத்தவர்.

 பெயர்: திரு. ஹூமாயூன்

வயது: 48 (மார்ச் 7,கி.பி 1508 முதல் ஜனவரி 27, 1556)

இராஜ்ஜியம்: இன்றைய பாகிஸ்தான், பின் இந்தியா (வட இந்தியா மட்டும்).
 
சரித்திர நிகள்வு:

1. 1530 ல் பதவியேற்றார்.

2. இவர் காலத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் காலூன்றினர்.

3. குஜராத்தை கைப் பற்றி பின் இழந்தார்.

4. மே 17, 1540 ல் பாகிஸ்தானையும் இழந்தார். (ஆப்கனியரிடம், பாகிஸ்தான் லாகூர் வரை)

5. 1544 ல் அணைத்தையும் இழந்து (பாதி தம்பிகளிடம்) பின் பாரசீக மன்னரின் உதவியை நாடினார். அதற்கு உபகாரமாக சன்னியிலிருந்து, ஷையாவக மாறினார், நம்ம கோஹினூரும் கை மாரியது.

6. ஜூலை 23, 1555ல் மறுபடியும் டெல்லியை கைப்பற்றினார்.

7. ஜனவரி 241 1556ல் படியில் தடுக்கி விழுந்து கோமா ஸ்டேஜிக்குப் போனார். மூன்றாம் நாள் இறந்தார்.

 சாதனைகள்:

1. வானியல், பூகோளம், ஜோதிடம், பௌதீகம் போன்றவற்றில் சிறந்த மேதை.

2. டெல்லியில் ”தின் பானா” என்ற கோட்டையை கட்டினார் (அதற்கு ”இறை நம்பிக்கை உள்ளவர்களின் புகலிடம்” என்று பெயர்).

வேறு பெரிதாக சொல்லுற அளவுக்கு இவர் ஆட்சியில் இல்லை...இவரின் தடுமாற்றக் குணத்தால் எதையுமே சாதிக்க முடியாமல் போனது.

 குறைபாடுகள்:

1. எதெற்கெடுத்தாலும் விழா எடுப்பார். இந்த விசயத்துல நம்ம பாசக்கார தலைவனுக்கு இவரு முன்னோடி.

2. அவசர புத்திக்காரர்.

 துணுக்கு:

1. பெரிய குடிகாரர், போதைக்கு அடிமை. பெண்ணுக்கும்.

2. மூட நம்பிக்கை அதிகம் கொண்டவர்.

3. ஒருநாள் கங்கையை கடக்கும்போது வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டார். அப்போது அவரைக் காப்பாற்றிய ஒரு கூலியாளுக்கு நன்றி சொல்லும் பொருட்டு நம்ம ”ஒருநாள் முதல்வர்” போல, இரண்டு நாள் அந்த கூலியாளை மன்னராக சிம்மாசனத்தில் அமரச் செய்தார். அந்த அளவுக்கு நல்லவருங்கோ...!!

அக்பர்: (மொகலாய மூன்றாம் அரசர்)

ஹீமாயுனுக்கும், ஹமீதாவுக்கும் பிறந்தவர் அக்பர். இந்திய தேசம் மட்டும் இல்லாமல் உலகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர். மொகலாய இராஜ்ஜியத்தை பாபர் உருவாக்கினாலும் அதற்கு அக்பராலேயே புகழ் ஏற்பட்டது. காஷ்மீரிலிருந்து கோதாவரி வரையும், ஆப்கன் முதல் வங்காளம் வரையிலேயும் ஒரு பரந்த பாரதத்தை உருவாக்கியவர். சரித்திர ஆசிரியர்கள் நடுநிலை வகித்தாலும் ஒருசில இடங்களில் தங்களின் சொந்த கருத்தை, சமயத்தை, ஜாதியை சரித்திரத்தின் உள்ளே திணிக்க முயலுவார்கள். ஆனால் அக்பர் விசயத்தில் எல்லோருடைய கருத்தும் ஒருமித்த கருத்தாகவே இருந்தது, இதுவே இவருக்குக் கிடைத்த மிகப் பெரும் சாதனையாகும். இப்போ தமிழ் நாட்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சி அமைப்போம்னு சொன்னாங்களோ, அதேபோலத்தான் அக்பரின் வம்சம், அக்பர் போல ஆளுவோம் என தீர்மானம் எடுத்தது. அக்பர் போல அவருக்கு முன்னும், பின்னும் எவரும் ஆட்சி அமைத்ததில்லை இதுவரை...!!!

 பெயர்: திரு. அக்பர்

வயது: 63 (அக்டோபர் 15, 1542 முதல் அக்டொபர் 15, 1605)

இராஜ்ஜியம்: ஆப்கன், பாகிஸ்தான், இந்தியா (தமிழ்நாட்டைத் தவிர), இந்தியவைச் குற்றியுள்ள ஏனைய குட்டி நாடுகள்.

சரித்திர நிகள்வு:

1. பிப்ரவரி 14, 1156ல் அரியனை ஏறினார்.

2. நவம்பர் 5, தனது பாட்டனார் பாபர் பானிப்பட் போர் நடத்திய அதே கிராமத்தில் அக்பர் படையும், ஹேமுவின் படையும் மோதிக்கொண்டது. போரில் அக்பர் வெற்றி கண்டார்.

3. எந்த ஒரு அரசை போரில் வெற்றிபெரும் போது, அந்நாட்டின் அரசர்களைக் கொல்லாமல், சுய ஆட்சி உரிமையை தந்து விடுவார். கப்பம் மட்டும் கட்ட வேண்டும். மேலும் அவர்களை அதிகாரத் தோரணையுடன் நடத்தாமல், அவர்கள் வீட்டு பெண்களையே மணந்து உறவைப் பலப்படுத்திக் கொண்டார்.

4. மிகவும் புகழ்பெற்ற சித்தூர் கோட்டைக் கைப்பற்றப் பட்டது.

5. 1563 ல் மதுரா நகரில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடவிருந்து பெறப்படும் வரியை நத்து செய்தார்.

6. முஸ்லீம் அல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட “ஜிஸியா” வரியை ரத்து செய்தார். எல்லா மதமும் சம்மதமே என்று முழங்கிய முதல்/கடைசி மொகலாய மன்னர்.

7. இவர் ஆட்சிக்காலத்தில் எல்லா மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்ததால், இஸ்லாம், இந்து, கிரிஸ்தவம், சீக்கியம் போன்ற மதங்கள் செழித்தோங்கியது.

8. அமைச்சரவையில் மற்ற மதத்தினரை சம அளவு நிருத்தினார்.

9. பல இந்து, சீக்கியதகளை  இவர் ஆட்சியில்தான் பொர்த் தளபதிகளாக நியமித்தார்.

10. அணைத்து மதக் கோவில்களுக்கும் மாணியங்கள் வழங்கப் பட்டது.

12. கட்டுக்கோப்பான, நேர்மையான அரசை உருவாக்கினார். சொந்தங்காரங்களும் இவர் தண்டனையிலிருந்து தப்பவில்லை. இதனால் ஊழல் அறவே நிருத்தப் பட்டது.

13. தர்பாரை உருவாக்கினார், இதனால் பல பிரச்சனைகள் அலசி ஆராயப்பட்டே முடிவு எடுக்கப்பட்டது, இவரு தர்பாரில் ஒரு கலக்கு கலக்கிய நட்சத்திரம் நம்ம பீர்பால்தான்.

14. நான்காவது சீக்கிய குருவான ராம்தாஸ் காலத்தில் அமிர்தசரஸில் பொற்கோயில் கட்டப்பட்டது...அந்த கோவிலுக்கான நிலத்தையையும், ஏரியையும் இலவசமாக அவர்களுக்கு கொடுத்தது நம்ம அக்பரேதான்...

 சாதனைகள்:

1. போரில் தோற்ற மன்னர்களை மிகவும் மரியாதையாக நடத்தினார். எனவே அணைத்து சிற்றரசர்களுமே அவரின் அன்பிற்கு கட்டுப்பட்டனர்.

2. மகேஷ்தாஸ் என்ற பீர்பாலை தனது நண்பராகவும், ஆலோசகராகவும், போர்த் தளவதியாகவும் நியமித்தது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு செயலாகும்.

3. படிக்காத இவர் பெரிய நூலகத்தை ஏற்படுத்தினார். நிறைய புத்தகங்கள் பார்சியிலும், சமஸ்கிருதத்திலும், இவர் ஆட்சியில்தான் மொழிப்பெயச்சி செய்யப்பட்டது.

4. எளிமையான அரசியலிலும், மக்களுக்கு ஏற்ற அரசாக இருப்பதிலும், மற்றபல விசயங்களிலும் இவரது சாதனையை பட்டியல் போட முடியாது...பின்னால் வரும் இழைகளில் அவற்றைத் தொடர்கிரேன்..

 குறைபாடுகள்:

1. இவரது சிறந்த பண்பான ஆட்சியினால், வரலாற்று ஆசிரியர்களுக்கு இவ்ரது குறைகள் அவ்வளவாக தெரியவில்லை போலும்...எனவே குறைகளை பட்டியலிடவில்லை.

2. இஸ்லாம் அமைச்சர், பண்டீதர்களிடையே இவருக்க அவ்வளவு மரியாதை இல்லை. அதற்கு காரணம், இந்துக்களை அரவணைக்கிறேன் என்று, இவர் சிவராத்திரி போன்ற பூஜைகளில் கலந்து கொள்வது, புதிய மதம் தோற்றுவித்ததினால்...மற்றபடி பெரிதாக இவர்மேல் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.

 துணுக்கு:

1. இவரது மதச் சார்பற்றத் தன்மை கண்டு, இவர் மதம் மாறி விடுவார் என முஸ்லீம் அமைச்சர்கள் கவலை கொண்டனர். எப்படியும் கிரிஷ்தவத்திற்கு வந்து விடுவார் என பாதிரியார்கள் நம்பினர்...இந்துக்களும் நம்பினர்...ஆனால் யாருமே எதிர்பார்க்காதபடி, தீன் - இலாஹி (கடவுளின் மதம்) என்னும் புதிய மதத்தினை தோற்றுவித்தார். இந்து, ஜென, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு இந்த மதம் அவசியம் தேவை என கருதினார். யாரையும் மதம் மாற கட்டாயப் படுத்தக் கூடாது என கண்டிப்புடன் ஆணையிட்டார்.

3. பின்னல் வந்த மொகலாய அரசர்களும் நல்லாட்சி புரிந்தாலும் எல்லா மன்னர்களையும் அக்பருடனையே ஒப்பீட்டு பர்த்ததால், அவர்களின் பெருமைகள் அவ்வளவாக பேசப்படவில்லை.

ஜஹாங்கீர்: (மொகலாய நான்காம் அரசர்)

அக்பருக்கும் ஜெய்ப்பூர் மன்னரின் மகளுக்கும் பிறந்த சலீம் என்பவர்தான் ஜகாங்கீர். சலீம் என்பது அகபருடைய குரு/மகானகிய ஷேக் சலீம் சிஷ்ட்டியின் பெயர். நீண்ட நாள் (27 வயது வரை) குழந்தையில்லாத அக்பர், திரு சலீமிடம் முறையிட்டார், அவரின் ஆசி படி குழந்தைகள் பிறந்ததால் குழந்தைக்கு தன் குரு பெயரையே சூட்டினார். பின்னால் அவருக்கு ஜஹாங்கீர் என்று பெயர் மாற்றம் செய்து முடிசூட்டிக் கொண்டார். ஜஹாங்கீர் என்றால் ”உலகைக் கைப்பற்றுபவர்” என்று பொருள்

 பெயர்: திரு. ஜஹாங்கீர்.

வயது: 58 (ஆகஸ்ட் 30,கி.பி 1569 முதல் அக்டோபர் 28, 1627)

இராஜ்ஜியம்: ஆப்கன், பாகிஸ்தான், இந்தியா

சரித்திர நிகள்வு:

1. அக்டோபர் 24, 1605ல் ஆக்ராவில் அரியணை ஏரினார்.

2. 1611 ல் அறிவிலும், அழகிலும், இராஜ தந்திரத்திலும் சிறந்து விளங்கிய நூர்ஜகானை மணந்தார்.(நூர்ஜகான் இளம் விதவை).

3. அரசர் ஜஹாங்கீரானாலும், ஆண்டது நூர்ஜகானே...(நூர்ஜகானை குறைத்து மதிப்பிட இயலாது. கலைகளிலும், கவியிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியப் பெண்மணி. “அத்தர்” என்னும் வாசனை திரவியத்தை உருவாக்கியவர் இவரே).

4. 1615 ல் சர் தாமஸ் ரோ பிரபு வந்தார். கிழக்கிந்திய கம்பெனி ஆரமிப்பதற்காக..

5. அக்டோபர் 28, 1627 ல் உடல்நிலை குறைவால் இறந்தார்.

6. துளசிதாஸ் வாழ்ந்து இராமாயணம் எழுதியது இவர் காலத்தில்தான். அந்த அளவு மத சகிப்புத்தன்மை கொண்டவர்.

 சாதனைகள்:

1. ”கலைஞ்கர்களுக்கு ஓர் தந்தை” என்று அழைக்கப் பட்டார். அந்த அளவு கலைகளில் ஈடுபாடு.

2. தன் தந்தை விட்டுச்சென்ற நாட்டை, நிர்வாகத்தை அப்படியே திறம்பட நடத்தினார். அவையெல்லாம் அக்பரின் புகழுக்குமுன் மழுங்கடிக்கப் பட்டன...புதிதாக எதையும் சாதிக்கவில்லை. மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு களங்கம் ஏற்படுத்தவுமில்லை.

குறைபாடுகள்:

1. சீக்கிய மத குருவான ச்ர்ஜீன் சிங், தனது மகன் குஸ்ரூவிற்கு உதவியதற்காக மரணதண்டனை வழங்கப் பட்டது. இதனால் சீக்கியர்கள், மொகலாய சாம்ராஜ்ஜிய எதிர்ப்பிற்கு காரணமக அமைந்தது.

2. அரசியல் காரணங்களுக்காக, தன் மகனையே சிரையில் அடைத்து சித்திரவதை செய்தார், பின்னர் குஸ்ரூ நூர்ஜகானின் சதியால் கொல்லப்பட்டார்.

3. பாதிநேரம் போதையிலேயே இருந்ததால், நிர்வாகத்தில் லஞ்சம், கள்ளத்தனம் தலையெடுத்தது.

துணுக்கு:

1. பெண்கள் விசயத்தில் ரெம்ப வீக். கிட்டத்தட்ட 300 மனைவிகள்.

2. சிறந்த ஆராய்ச்சியாளர், ஓவியக் கலைஞ்கர்.

ஷாஜஹான்: (மொகலாய ஐந்தாம் அரசர்)

இவரைப் பற்றி யாருக்கும் சொல்லத் தேவையில்லை. மற்ற எல்லா மன்னர்களைப் பற்றி, சரித்திரம் தெரிந்த அல்லது கல்வி அறிவு உடையவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் ஷாஜஹான் உலகத்திலுள்ள பெரும்பாலானோருக்கு பரிட்சயமானவர். தாஜ்மகால் என்றதும் ஷாஜகானை நினைவு கூறும் மக்கள், அவரின் கடைசிகால துன்பங்களைப் பற்றி அறியாமல் போனது வேதனைக்குறியதே...(ஷாஜஹான் என்றால் உலகை ஆள்பவர் என்று பொருள்).

 பெயர்: திரு. ஷாஜஹான்

வயது: 74 (1592 முதல் ஜனவரி 22, 1666)

இராஜ்ஜியம்: பாகிஸ்தான், இந்தியா

சரித்திர நிகள்வு:

1. பிப்ரவரி 4ம் தேதி, 1628ல் முடிசூட்டிக் கொண்டார்.

2. மேற்கு வங்கத்தில் வணிகம் செய்ய வந்த போர்த்துகீசியர்கள், மக்களை அடிமைப் படுத்தியும், கிரிஸ்தவத்திற்கு மதமாற்றத்திலும் ஈடுபட்டனர். இவர் அங்கு 3 மாதம் தங்கி, 10,000 போர்த்துக்கீசியர், பாதிரியார்கனைக் கொன்றார். 5000 பேர் சிறை பிடிக்கப் பட்டனர். அதன்பின் அவர்கள் அடக்கி ஒடுங்கி இருந்தார்கள்.

3. 1612 ஷாஜஹான் - அர்ஜூமான் பானு பேகம் (மும்தாஜ்) திருமணம் நடைபெற்றது.

4. ஜூன் 7, 1631 மும்தாஜ் இறந்தார்.

5. 1632-1653 தாஜ்மகால் கட்டப் பட்டது. தாஜ்மஹாலில், வைரம், வைடூரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம் போன்றவை வைத்துக் கட்டப் பட்ட்டது. பின் ஆங்கிலேயர்களால் சுரண்டியெடுத்து சூரையாடப் பட்டது.

6. பல போர்களில் தோல்வி கண்டார்.

7. செப்டம்பர் 1657 ல் நோயால் படுக்கையில் விழுந்தார்.

8. ஆக்ராவில் 8 ஆண்டுகள் தன் மகன் ஔரங்கசிப்பால் சிறை வைக்கப் பட்டார். மாற்று உடைகள், உழுதும் உபகரணம், ஆபரணங்கள் பறுக்கப் பட்டன. புனித குர்-ஆன் மட்டுமே படிக்க அனுமதிக்கப் பட்டது...எப்போதும் தாஜ்மஹாலை பாத்துக்கொண்டே இருந்தார்.

9. ஜனவரி 22, 1666 ல் தாஜ்மஹாலைப் பார்த்தவாறே பரிதாபமாக உயிரை விட்டிருந்தார்..

10. முழுக்க முழுக்க கருப்புநிற சலவைக் கற்களால் தாஜ்மஹாலைப் போலவே தனக்கும் கல்லரை கட்டவேண்டும் என அவரின் விண்ணப்பம் அவரின் மகன் ஔரங்கசிப்பால் நிராகரிக்கப் பட்டது.

சாதனைகள்:

1. தாஜ்மஹால், செங்கோட்டை, ஜும்மா மசூதி போன்றவற்றைக் கட்டினார்.

2. ஷாஜனாபாத் (டெல்லி) நகரை உருவாக்கினார்.

3. இந்தி மொழியில் இலக்கியம், கட்டிடக்கலை சிறந்து விளங்கியது.

 குறைபாடுகள்:

1. அக்பர் கட்டிய இந்து - முஸ்லீம் ஒற்றுமை கோட்டையை சிறு உளி கொண்டு உடைத்தவர் இவரே...பின்னால் அந்த மலைய தகர்த்தவர் ஔரங்கசிப்.

2. குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை உருவானது. தனது மகளின் பேச்சைக்கேட்டு ஔரங்கசிப்பை ஓரங்கட்டினார்/மட்டம் தட்டினார். பாரபட்சமாக நடந்துகொண்டார். பெற்ற பிள்ளைகளிடம் பொருப்புள்ள தந்தையாக இருக்கவில்லை. அதனுடைய பலனை அவருடைய காலத்திலே அனுபவித்தார்.

3. நிதி நிலை சீரழிந்தது. பொருளாதார நிலை படு மோசமானது. மோசமான நிர்வாகமாக மாறியது இவரது காலத்தில்.

4. முஸ்லீம்கள் அணியும் பாணியில் எந்த உடையையும், ஆபரணத்தையும் இந்துக்கள் அணியக்கூடாது என ஆணையிட்டார். முஸ்லீம்களை பணியாளாக வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். அதிகளவு இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

5. புதிதாகக் கட்டப்பட்ட இந்துக்கோவில்களை இடிக்க ஆணையிட்டார். காசியில் மட்டும் இவரது காலத்தில் 63 கோயில்கள் இடிக்கப் பட்டது.

 துணுக்கு:

1. நிறைய இருக்குது...பின்னால் பாக்கலாம்..

 ஔரங்கசீப்: (மொகலாய ஆறாம் அரசர்)

ஷாஜஹானுக்கும், மும்தாஜுக்கும் 6வது மகனாகப் பிறந்தார். பாபரால் உருவாக்கப் பட்டு, அக்பரால் விஸ்தரிக்கப் பட்ட மொகலாய சாம்ராஜ்ஜியத்தை தனது பிடிப்பான கொள்கையால் அழிவதற்கு காரணமாக இருந்தவர்.

 பெயர்: திரு. ஔரங்கசிப்

வயது: 91 (அக்டோபர் 24, 1618 முதல் பிப்ரவரி 20, 1707)

இராஜ்ஜியம்: இன்றைய பாகிஸ்தான், இந்தியா (வட இந்தியா மட்டும்).

 சரித்திர நிகள்வு:

1. ஜூலை 1658 ல் மிகவும் எளிமையாக முடிசூடிக் கொண்டவர்.

2. தனது வாழ்நாளை பெரும்பாலும் போர்களத்திலேயே தொலைத்தவர்.

3. இவரது கொள்கைகளால் பெரும்பாலான இடத்தில் புரட்ச்சிகள் வெடித்தது.

4. எகோம்ஸ் என்னும் அஸ்ஸாமியர் ( இன்றைய பங்களாதேஷ்) புரட்சி செய்தனர். பயங்கர போருக்குப் பின், கௌகாத்தி நகரை அவர்களீடம் இழந்தார்.

5. ”ஆலம்கீர்” என்று முடிசூட்டிக் கொண்டதைத் தொடர்ந்து, 1659 ல் இந்துக்கள் புதிதாக கோயில்களைக் கட்டக் கூடாது என்றும், பழைய கோயிகளை பழுது பார்க்கக் கூடாது என்றும் ஆணையிட்டார்.

6. 1669 ம் ஆண்டு, கடந்த 10 ஆண்டுகளுக்குள் கட்டப் பட்ட கோயிகள் கட்டாயம் இடித்துத் தள்ளப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. காசி, மதுரா, சோம்னாத் போன்ற முக்கியமான கோவில்களும் இதில் அடக்கம்.

7. வங்காளம், உதய்ப்பூர், ஜோத்பூர், உஜ்ஜயினி, மகராஷ்ட்டிரம் போன்ற நகரங்களிலும் கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது.

8. ஹோலி, தீபாவளிப் பண்டிகைகளுக்கு தடைவிதிக்கப் பட்டது. பஞ்சாங்கம் தடைவிதிக்கப் பட்டது.

9. அக்பரால் ஒழிக்கப்பட்ட “ஜிஸியா” வரி மீண்டும் கொண்டுவரப் பட்டது.

10. இந்துக்களுக்கு மட்டும் கஸ்டம்ஸ் வரி இரு மடங்காக உயர்த்தப் பட்டது.

11. முஸ்லீம்களைத் தவிர, ராஜ புத்திரர்கள் மட்டும் பல்லக்கு, குதிரையில் செல்லலாம், வாழ் வைத்துக் கொள்லலாம் என ஆணை பிறப்பிக்கப் பட்டது.

12. இந்துக்களை மதம் மாற்றும் முயற்சிகள் பெருமளவு எடுக்கப் பட்டன. மதம் மாறுபவர்களுக்கு சலுகைகள் வழங்கப் பட்டன. பல்வேறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை பெற்றவர்களில் முஸ்லீமாக மாற ஒப்புக் கொண்டவர்களுக்கு தண்டனை குறைக்கப் பட்டது. “ மனதளவில் இந்துக்களிடம் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தவர் என்று ஔரங்கசீப்பை சொல்ல முடியாது. ஒரு தீவிரமான, உண்மையான முஸ்லீம் என்கிற முறையில் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு பாதுஷா கண்டிப்பாக நடந்து கொண்டதன் விளைவுதான் இத்தனையும்” என்று ஒரு கோணத்தில் தர்க்கம் புரிபவர்களும் உண்டு.

13. ஜிஸியா வரியை எதிர்த்து புரட்சிகள் வெடித்தது. பலர் பேரணிகள் நடத்தினர். அணைவரும் கொல்லப் பட்டனர்.

14. சத்நாமிகள், “ஜாட்” இனமக்கள், சீக்கியர்கள், மராட்டியர்கள், ராஜ புத்திரர்கள் மொகலாய இராஜ்ஜியத்திற்கு எதிராக எழுந்தனர்...( இவர்கள் அணைவரும் அக்பரால் ஒருங்கிணைக்கப் பட்டு, அவரின் அன்பின் அரவணைப்புக்குள் இருந்தவர்கள் ஷாஜஹானின் ஆட்சிவரை).

15. தெஹ் பகதூர் என்னும் சீக்கிய மதகுருவை யானையின் காலால் மிதிக்க வத்துக் கொன்றார். இதனால்தான் சீக்கியர்கள் மொகலாய ஆட்சிக்கு எதிராகத் திரும்பினர்.

16. 1679 ல் ராஜ புத்திரர்களுக்கும் ஜிஸியா வரி விதிக்கப்பட்டது.

17. 1679 ல் ஜோத்பூரில் உள்ள நூற்றுக்கணக்கன கோயில்கள் இடிக்கப்பட்டன. அதனால் மார்வார் (ஜோத்பூர்), மோவார் (சித்தூர்) படைகளும் இணைந்து ( அதுவரை நம்ம தி.மு.க அ.தி.மு.க மாதிரி இவர்கள் எதிரிகள், அவர்களை இணைத்த பெருமை ஔரங்கசீப்புக்கே) மொகலாயா ஆட்சிக்கு எதிராக போர் தொடுத்தனர். போரில் அவர்கள் தோல்விகண்டனர். பின்னர் ஜோத்பூரில் 173 கோயில்களும், சித்தூரில் 63 கோயிகளும் இடிக்கப் பட்டது.

18. வடக்கே ராஜ புத்திரர்களும், சீக்கியர்களும் பிரச்சனையானபோது தெற்கே ஒரு வேங்கை பிரச்சனையை கிளப்பியது. அவர்தான் சத்ரபதி சிவாஜி.

19. ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்ட்டிரா போன்ற மாநிலங்கள் சிவாஜி, பின்னர் ஔரங்கசிப் என மாறி மாறி கைமாறி கடைசியாக சிவாஜியின் வசம் வந்தது. தமிழகத்தில் செஞ்சி, கடலூர், வேலூர், திருச்சி போன்றவை சிவாஜியின் ஆளுகைக்குள் வந்தது. சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு அணைத்தும் ஔரங்கசீப்பின் வசம் சென்று, மீண்டும் மராட்டிய மன்னர்களிடம் சென்றது.

20. 1707 பிப்ரவரி 20 வெள்ளைக் கிழமை இயற்கை மரணம் எய்தினார்.

சாதனைகள்:

1. மொகலாய வம்சத்திலே இஸ்லாமிய கொள்கையை முழுமையாகக் கடைபிடித்தவர் இவர் ஒருவரே.

2. தன்னை ஒருபோதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்று நினைத்ததில்லை இவர்.

3. தன்னைப் பாடி புகழும் கவிஞர்கள் விரட்டி அடிக்கப் பட்டனர். இசை மற்றும் நாட்டிய விழாவிற்கு மூடு விழா நடத்தினார். ஆண்கள் பெண்மைத்தனம்போல் ஆடை, ஆபரணம் அனிவதற்கு தடை விதித்தார்.

4. மது, புகை, கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு தடை விதிக்கப் பட்டது.

5. ராஜாங்க விஷயங்களிலும், ஆஸ்தான சபையிலும் மரபுகளும், சம்பிரதாயங்களும், சட்டதிட்டங்களையும் துளிகூட மீரக்கூடாது என கண்டிப்புடன் இருந்தார்.

6. மக்களிடம் நேரடியாக குறைகள் கேக்கப் பட்டு, உடனே நிவீர்த்தி செய்யப்பட்டன.

7. வெள்ளத்தால், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டால் வரி ரத்து செய்யப்பட்டது உண்மையா என சோதித்த பின்.

8. முத்து மசூதி கட்டினார்.

9. அவரது மனைவி தில்ரஸ்பானு பேகம்க்கு தாஜ்மஹால் மாதிரியே கல்லரை கட்டினார். ஆனால் தாஞ்மஹாலை எல்லாரும் ஒப்பிட்டு இதை தாழ்த்திப் பேசினர்.

10. தனது 86 வயதிலும் போருக்கு சென்றார். (ச்சே...நம்ம மஞ்சள் துண்டு, அச்சுதானந்தந்தான் கொஞ்சம் சுரு சுருப்புன்னெ நினைச்சிக்கிட்டு இருந்தேன்..)

 குறைபாடுகள்:

1. அரசியல் காரணங்களுக்காக தனது அண்ணன், தம்பி, தங்கை, மகன் ஆகியொரைக் கொன்றார்.

2. எல்லா முடிவுகளையும் தானே எடுப்பார். எனவே அரசாங்க அதிகாரிகள் சொந்த முடிவு எடுக்க முடியாமல் இவரையே எதிபார்த்து சோம்பி போனார்கள். ஒரு திறமையற்ற அரசாங்கம் உருவானது.

3. இசைக்கு தடை விதித்தார்.

4. இவரது ஐம்பதாண்டு ஆட்சியின் முடிவில் மொகலாய அரசு சரியத் தொடங்கியதால் நாட்டிலும், வீட்டுப் பிரச்சனையிலும் நொந்து போனார். இது அவரால் வரவழைத்துக் கொள்ளப்பட்ட பிரச்சனை என்பதனை நன்கு அறிந்திருந்தார். அவர் வருத்தப் பட்ட படியே, அவரது வாரிசுகள் இரத்தப் பசியோடு வாளை உயர்த்தினர் இவரது மரணத்திற்குப் பின்னர்.

5. ஷாஜஹானுக்கு இவர் கொடுத்த தண்டனையால் எல்லோராலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார்.

6. பட்டத்து அரசரான தாராவை (இவரின் அண்ணன்) இவர் கொன்றதால் எல்லோரும் முகம் சுழித்தனர். ஏனென்றால் தாராவின்மீது மக்களிடத்திலும், அமைச்சரவையிலும் அந்தளவுக்கு மதிப்பு இருந்தது.

7. இந்துக்களிடத்தில் ஒட்டுமொத்த மதிப்பை இழந்தார்.

 துணுக்கு:

1. கிட்டத்தட்ட அக்பருக்கு இணையான புகழைப் பெற்றார். இருவருமே மகா புத்திசாலிகள். ஆனால் இருவரும் இருவேரு துருவங்களாக இருந்தனர். இந்தியா இஸ்லாமிய நாடு அல்ல. அப்படி மாற்றவும் முடியாது என தெளிவான கருத்தைக் கொண்டிருந்தவர் அக்பர். ஔரங்கசிப்போ பிடிவாதத்துடன் இந்தியாவை இஸ்லாமிய நாடாகவே நடத்தப் பார்த்தார். அதுவே மொகலாய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

2. ஔரங்கசீப்பின் அணுகுமுறை பற்றிய காரண காரியங்களை விலாவாரியாக விவரிக்கும் புத்தகங்களையும், கட்டுரைகளையும் நூற்றுக கணக்கில் அடுக்க முடியும்!. மன்னரின் மனதுக்குள்ளேயெல்லாம் புகுந்து அவர் எண்ண ஓட்டங்களை அலசிப்பார்க்க முயன்ற வரலாற்று ஆசிரியர்களும் நிறையவே உண்டு. நம்மைப் பொருத்த வரையில் ஔரங்கசீப் எடுத்த நடவெடிக்கைகளையும் அதன் விளைவுகளையும் மட்டுமே எடுத்துக் கொண்டு எல்லாராலும் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாற்று தகவல்களோடு நிறுத்திக் கொள்வோம்!.

3. ஒருமுறை கடுமையான போர் நிகள்ந்தபோது கொஞ்சமும் சலனப் படாமல், தனது கம்பிளியை விரித்து போர்களத்திலேயே தொழுகை செய்தார். இவறது வீரத்தைப் பார்த்த எதிரி படை தளபதி அவரை தொல்லை செய்ய தனது படைகளுக்கு அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு பக்திமான்.

4. திருமண விசயத்தில் கூட தனக்கு வரையறுக்கப் பட்ட இஸ்லாமிய கோட்பாடுகளை இவர் மீறவில்லை. 4 மனைவிகள் 10 குழந்தைகள் மட்டும்.

5. மது அருந்தாத ஒரே மொகலாய மன்னர்.

6. இன்றளவும் ஔரங்கசீப் என்னும் தனி மனிதரை ஒரு வட்டத்துக்குள் அடக்கி முத்தாய்ப்பாக விளக்க முடியவில்லை என்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இருந்தபோதும் சரி, இறந்தபோதும் சரி ஒரு புரிபடாத விடுவிக்க முடியாத பெரும் புதிராகவே விளங்கினார் ஔரங்கசீப்!. இவரின் குறைகளை மட்டும் வரிசைப் படுத்தி “மிக மோசமான அரசர்” என்று முத்திரை குத்தும் ஆசிரியர்களும் உண்டு. “இவரை மிஞ்சிய சிறந்த ஆட்சியாளர் எவரும் இல்லை” என புகள் பாடுபவர்களும் உண்டு. இரு தரப்பினருக்குமே எடுத்துக் கையாள ஏராளமான வாதங்கள் வரலாற்றின் கைவசம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

”ஔரங்கசிப் ஒரு சரியான கொலைகார ஆசாமி” என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. மற்ற மல மன்னர்களை விட அப்படி ஒன்றும் ரத்தம் சிந்துவதில் இவர் ஆர்வம் காட்டியதாக சொல்ல முடியாது. தைமூரைப் போலவோ, முகமது பின் துக்ளக் போலவோ, அலாவுதீன் கில்ஜியைப் போலவோ கண நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு யார் தலையையும் சீவியதில்லை இவர். ஒவ்வொரு சுல்தான் ஆட்சியிலும் அரியணைக்காக வாரிசுகள் வாளெடுத்து மோதிக்கொண்டதுண்டு. ஷாஜஹான் தனக்கு போட்டியாக இருந்த உடன்பிறப்புகள் எல்லரையும் கொன்றுவிட்டு வின் இரத்தப் படிகட்டிகளில் ஏறி மகுடம் சூட்டிக் கொண்டார். இந்த விசயத்தில் இவரை மட்டும் தனிமைப்படுத்தி “கொலைகாரர்” என்று குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள்.

தந்தையார் ஷாஜஹானை இவர் நடத்திய விதம் மோசமானதே. பெரும் புகழுடன் கோலாகலமாக ஆட்சி புரிந்த சக்கிரவர்த்தியை நிராதரவாக வீட்டுச் சிறையில் தள்ளி, கேவலமாக நடத்தியது குறித்து யாராலும் பொருமாமல் இருக்க முடியாது. தங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த தந்தையையும், வளர்த்து ஆளாக்கிய பெரியவர்களையும் வெட்டி சாய்த்துவிட்டு அரியணைக்குச் சென்றவர்கள், இந்திய மற்றும் உலக வரலாற்றுப் பக்கங்களில் நிறையவே பவனி வருகின்றனர். ஏதோ இவர் தந்தையை உயிரோடவாது விட்டார் என சிலர் வாதாடுவதும் உண்டு. புதிரால் சுற்றப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று ஔரங்கசிப் அழைக்கப் பட்டாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எளிமை, கட்டுப்பாடு, கண்டிப்பு மிகுந்ததாக அமைந்தது. கடைசிவரை அவர் உணர்ச்சிக்கு அடிமையாகவில்லை.குடிப்பளக்கம், உணவு,உடை விசயத்தில் ஆடம்பரத்தை அனுமதித்தவரில்லை. பேரக் குழந்தைகளுடன் எப்போதாவது நேரத்தைக் கழிக்கும் போதும், அவர்களை மடியில் அமர்த்தி, இறைவனின் பெருமைகளை தெளிவாகவும், சுவையாகவும் சொல்வதுதான். அர்த்தமில்லாத வெட்டிப் பேச்சுக்கு, விளையாட்டிற்கு தடா.

7. தன் கைகளால் குல்லா தைத்ததற்கு கூலியாக 4 ரூபய், 2 அணாகளும், திரு குர் ஆனிலிருந்து பிரதி எடுத்ததற்காக 305 ரூபாயும் உள்ளது. அதை ஏளைகளுக்குச் செலவிடுங்கள் என்றார். எனது கல்லரையும் மிகவும் எளிமையாக வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும், சுற்றி பசுமை செடிகள் இருக்க வேண்டும். எவ்வித அழகோ ஆடம்பரமோ, இசையோ இருக்கக்கூடாது என உயிலில் எழுதியிருந்தார். அதன்படியே அமைத்தனர்.


எது எப்படியோ, மொகலாய இராஜ்ஜியத்தில் அக்பருக்கு அடுத்த படியாக பேசப்பட்ட நட்சத்திரம் ஔரங்கசீப். அதிக ஆண்டுகள் ஆட்சி செலுத்தியதும் இவரே...!! இவரைப் பற்றிய கருத்துக்கள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும் வேறுபடும். அந்த அளவு ஒரு புரியாத புதிராகவே 91 வருடங்களை கடந்திருக்கிறார்...ஆனால், மொகலாய வீழ்ச்சிக்கும், இந்து முஸ்லீம் பிரச்சனைக்கும் இவரை தவிர வேறு யாரையும் ஆராய்ச்சியாளர்கள் கை காமிப்பதில்லை

மற்றவர்கள்:

 ஔரங்கசிப்புக்குப் பின் வரிசையாக அரியணையில் அமர்ந்தவர்களில் நட்சத்திர அந்தஸ்து பெறக்குடியவர்கள் யாரும் இல்லை எனலாம். சிலர் சில ஆண்டுகள் ஆண்டார்கள், சிலர் சில நிமிடமே கட்சி தந்து எரிந்து மறையும் எரிகற்களைப்போல அல்லது கண்சிமிட்டும் நேரத்தில் தலைகாட்டி மறையும் நீர் கொப்பளங்களாக வந்து போனார்கள்.

 மு ஆஸம் (அ) ஷா ஆலம்:

 தனது 64 வயதில் 1707 ல் தனது இரு தம்பிகளையும் கொன்றுவிட்டு ”பகதூர் ஷா” என்னும் பட்டத்துடன் அரியணை ஏறினார். நாலரை ஆண்டுகள் ஆண்டுவிட்டு தனது 69ம் வயதில் மரணமடைந்தார்.

 ஜஹந்தர் ஷா:

 இவர் தனது மூன்று சகோதரர்களையும் கொன்றுவிட்டு மகுடம் சூட்டிக் கொண்டார். ஓராண்டு மட்டுமே ஆண்டார். இவரது ஆட்சி மிக அலங்கோலமாக அமைந்தது. தனது சகோதரர்களின் குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றார். ஃபரூக்ஸியார் மட்டும் தப்பினார். இவரது ஆட்சியில் அறிவார்ந்த பெரியோர்கள், ஆலோசகர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பின்னர் இவர் ஃபரூக்ஸியாரால் சிறையில் தள்ளப்பட்டு, பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டு இறந்தார்.

 ஃபரூக்ஸியார்:

ஜஹந்தர் ஷாவை வென்று, கொன்று ஆட்சியைப் பிடித்த இவர், அரியணை ஏரியதும் உருப்படாமல் போனார். 1719ல் அவரை பதவியிலிருந்து இறக்கினார்கள் ராஜாங்க பிரபுக்கள். இவரை சிறையில் தள்ளி கண்ணை பிடுங்கினார்கள். சுமார் 6 ஆண்டுகள் கழித்து 1719 ஏப்ரலில் சித்திரவதை செய்து கொன்றார்கள்.

 1719 பிப்ரவரியிலிருந்து செப்டம்பருக்குள் 3 ராஜகுலத்து இளைஞர்கள் அரியணையில் அமர்த்தப்பட்டு உடனே கீழே இரக்கப் பட்டார்கள். சரியான வாரிசுகள் கிடைக்காமல் டெல்லி அரண்மனையில் ஏகமாக முழப்பம் நிலவியது.!

 முகமது ஷா:

 ஒருவழியாக மறைந்த பகதூர் ஷா வின் 4வது மகனுக்குப் பிறந்த 18 வயது இளவரசர் ரோசன் அக்தர் என்பவர் ”முகமது ஷா”என்ற பெயருடன் பதவியேற்றார். கடசி மொகலாய மன்னரான முகமது ஷா, தனிப்பட்ட முறையில் மென்மையானவர். கொலை வெறியாட்டம் ஏதும் போடவில்லை. அந்த புரத்திலே தனது காலத்தை கழித்தார். நிவாகத் திறமையற்ற இவர், மொகலாய ஆட்சிக்குட்பட்டிருந்த ஒவ்வொரு பிரதேசமாக இழந்தார்.

1. தெற்கே மராட்டியர்கள் தங்கள் எல்லையை விஸ்தரித்தனர்.

2. அயோத்தியும், வங்காளமும் மொகலாயரிடமிருந்து கை நழுவின..

3. ஆக்ரா நகரத்தை “ஜாட்” இனத்தினர் தனி சுதந்திர நாடாக அறிவித்தனர்.

4. பஞ்சாப்பை சீக்கியர்கள் தங்கல் வசமாக்கினர்.

5. பாரசீக மன்னரான ”நாதிர் ஷா” வால் படையெடுக்கப் பட்டு டெல்லி கஜானா, போர்ப் படைகள் அணைத்தும் கொள்ளையடிக்கப் பட்டது. அதாவது டெல்லியில் சல்லி பைசா கூட இல்லை. அணைத்தையும் இழந்தார்.

6. போரில் சமரசம் செய்ய மொகலாய இளவரசர் இஸ்தன் பக்‌ஷ்க்கும் (ஔரங்கசிப்பின் பேரன்) நாதிர்ஷாவின் மகளுக்கும் திருமணம் நடந்தது. வரதட்சனையாக 70,00,00,000 ரூபாய் தங்க-வெள்ளி நாணையங்கள், பலகோடி மதிப்புள்ள தங்கத் தாம்பளங்கள், 50,00,00,000 ரூபாய் மதிப்புள்ள நகைகள், 100 யானைகள், 7000 குதிரைகள், 10,000 ஒட்டகங்கள், 150 கலைஞ்கர்கள், 500 தச்சர்-கொல்லர்கள், பலகோடி மதிப்புள்ள மயிலாசானம் இப்படி 348 ஆண்டுகள் மொகலாய ராஜ பரம்பரை சேர்த்து வைத்திருந்த சொத்து முழுவதும் ஒரே நிமிடத்தில் கைமாறியது. உட்ச்சக்கட்டமாக விலை மதிக்க முடியாத கோஹினூர் வைரமும் பரிபோனது என்பதுதான் வேதனையான விசயம்.

7. நாதிர் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிதத டெல்லி மக்கள் 2,00,000 பேர் கொல்லப் பட்டனர். அவர்களின் பிணங்கள் எரிந்து முடிவதற்குள் இந்த கல்யாணம் நடைபெற்றது.

 அகமது ஷா:

 முகமது ஷா இறந்த பின்னர் தனது 22 வயதில் அரியணை ஏறினார். தனது ஒழுக்கக் கேட்டினால் அணைவரிடமும் மதிப்பை இழந்தார். இவரை தனது ஒன்று விட்ட சகோதரன் சிறை பிடித்து கண்களை நோண்டினார்.

 இரண்டாம் ஆலம்கீர்:

 அகமது ஷாவை சிறைபிடித்து இவர் ஆட்சிக்கு வந்தார். 1759ல் இவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

 இரண்டாம் ஷா ஆலம்:

 இவரும் பொம்மை அரசரே. ஆப்னானியரிடம் போரில் தோற்று 12 ஆண்டுகள் பரதேசியைப்போல திரிந்தார். பின் மராட்டியரிடம் உதவி கோரினார். அவர்களின் உதவியால் டெல்லி அரமணையில் 1772ல் அமர்ந்தார். 1788ல் அரண்மனைக் காவலதிகாரியான காதிர் என்பவனால் நிவாணப் படுத்தப்பட்டு, சவுக்கால் அடிக்கப் பட்டு இன்னும் இங்கு எழுத முடியாத சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டார். இவர் கண்ணும் பிடுங்கப்பட்டது...(தயவுசெய்து இந்த இடத்தில் யாரும் அக்பரையும், ஔரங்கசிப்பையும், பாபரையும் நினைவு கொள்ள வேண்டாம்). இவரின் குழந்தைகளும், அரண்மனைப் பெண்களும் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைகளை அனுபவித்தனர். பின் ஒருவழியாக கிழக்கிந்திய கம்பெனியர்களால் காப்பாற்றப் பட்டார்.

 இரண்டாம் அக்பர் ஷா:

1806ல் ஷா ஆலம் இறக்க, இவர் அரியணையில் அமர்த்தப் பட்டார். அப்பொழுது மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் எல்லைகள் அரண்மனையின் நான்கு சுவர்கள்தான். இந்தியா முழுமையாக கை நழுவியிருந்தது. பின் கிழக்கிந்திய கம்பெனியர்கள் இவர்களுக்கு மானியம் கொடுத்து, இவர்கள் பெயரில் நாட்டை ஆண்டார்கள். 1837ல் இவர் மரணமடைந்தார்.

 இரண்டாம் பகதூர்ஷா:

 1837ல் இவர அரியனை ஏறினார். இவர்தான் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி சக்கிரவர்த்தி. கிட்டத்தட்ட ஒரு நல்ல மனிதர் என்கிறார்கள்.

 1857ல் கி.கம்பெனிகாரர்கள் பயன்படுத்திய என்ஃபீல்டு துப்பாக்கிகளில், க்ரீஸில், பசு மற்றும் பன்றியின் கொழுப்பைக் கலந்ததில் பிரிட்டீஷ்காரர்களை இந்து மற்றும் முஸ்லீம் சிப்பைகள் எதிர்த்தனர். பகதூர் ஷா கலகக் காரர்களுக்கு ஆதரவு தந்தார் என்று அவரை சிரை பிடிக்க உத்திரவிடப்பட்டது. அரண்மனையிலிருந்து தப்பி ஓடிய பகதூர்ஷா குடும்பம் ஹீமாயூன் கல்லரைக்குள் போய் ஒளிந்தார்கள். 1857 செப்டம்பர் 22ல் கைது செய்யப் பட்டனர். அவரது மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கடை வீதிகளிலும், பொது இடத்திலும் வைக்கப் பட்டனர். செங்கோட்டையில் ஒரு தூண் அருகே காலகளை மடக்கியவாறு, கிழிந்த உடைகளுடன், பீதி நிறைந்த விழிகளுடன் உடல் நடுங்க மொகலாய கடைசி பாதுசா பகதுர்ஷ அமர்ந்திருக்க அவருக்கு “குற்றவாளி” என்று ஆங்கில நீதிபதியால் தீர்ப்பு வழங்கப் பட்டது.(இதை படிக்கும்போது எனக்கே ரெம்ப வருத்தமா இருந்தது...மன்னரும் மன்னர் குடும்பமும் எவ்வளவு துயர்களை அனுபவித்திருப்பார்கள் என நினைத்தால்..!!!) தண்டனையாக பகதூர்ஷா பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் ரங்கூனில் நிராதவராக இறந்தார் பாபரின் வழித்தோன்றலும், கடைசி மொகலாய கச்சிரவர்த்தியுமான பகதூர் ஷா.

 1858ல் பிரிட்டீஷ் பார்லிமெண்ட்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்கு வர, இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் போனது. அதாவது அடுத்து இந்தியாவை விக்டோரியா மகாராணி ஆண்டார்.

2 comments:

  1. ஔரங்கசீப் பற்றி தகவல்கள் தவறு.
    இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறப்பான மன்னர் இவரே .இவரது காலத்தில் எந்த ஒரு இந்து கோவிலும் இடிக்கப்படவில்லை.காசியில் மட்டும் ஒரு கோவிலில் ஓர் இந்து அரசி பாலியல் வன்முறை செய்யப்பட்டதால் ஔரங்கசீப் அரசவையில் இருந்த இத்து மத அமைச்சர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டு அந்த கோவில் இடிக்கப்பட்டது.ஷாஜகானின் ஆட்சியில் தாஜ்மஹல் கட்ட மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டது, அவற்றை சரி செய்து மக்களின் குறைகளை நிறைவு செய்த மன்னர்.

    ReplyDelete
  2. Harrah's Hotel and Casino - JamBase
    Visit Harrah's Hotel and Casino in Hanover, MD. We have a 대구광역 출장샵 restaurant, a 포천 출장마사지 bar 제천 출장안마 and a full-service spa. Find reviews, hours, directions, 전주 출장마사지 and phone 여주 출장샵 #

    ReplyDelete