Search This Blog

Sunday, November 11, 2012

கேண்டீட்

17ம் நூற்றாண்டில் வெளிவந்த இந்த நாவல் பிரஞ்சு இலக்கியத்திலே மிகச் சிறந்த நாவலாம். எழுத்தாளர் திரு. வோல்ட்டர் அவர்களால் 1759ல் ப்ரெஞ்ச் மொழியில் பதிக்கப்பட்டது. பின் இது ஆங்கிலத்தில் பலரால் பொழிபெயற்கப்பட்டு தமிழில் திரு. பத்ரி சேஷாத்ரியால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலம் எப்படி இருந்திருக்கும் என்பதை நம் கண்முன் நிறுத்தியிருக்கின்றது. கதை முழுவதும் போரால் நாடு எப்படி பாதிக்கப்பட்டது, அன்றைய சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றியது. கதையில் வரும் அணைத்து பெண்களும் பலமுறை வன்புணர்வுக்குட்பட்டவர்கள். மக்கள் அணைவரும் பிச்சைக்காரர்களுக்கும் கீழான நிலமையில் இருந்தவர்கள்... நீதித்துறை, மதத்தலைவர்கள், அரசர்கள், தத்துவவாதிகள் ஆகியோர் எப்படி இருந்தனர் என்பதையும் மிக அருகாமையில் இருந்து பார்க்கும் உணர்வை  எழுத்தில் வடித்திருக்கின்றார்.

நாவலில் வரும் பெயர்கள் மட்டும்தான் கொஞ்சம் அந்நியமாய்த் தெரிகிறது. உண்மையில் 20ம் நூற்றாண்டில் நாம் பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை இந்த நாவலின் மூலம் அறியலாம்.

போரினால் காதலியை இழந்து, அவழைத் தேடி, சிலமுறை சந்தித்தும் தன்னுடைமையாக்க முடியாத சந்தப்பத்தால், மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக அவளை தொடர்ந்து தேடி கடைசியில் அவளை அடைவதுடன் கதை முடியாமல், வாழ்வின் எதாத்தம் என்ன, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுடன் நாவலை முடித்திருப்பார்.

‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்ற பிரபல வார்த்தைக்குச் சொந்தக்காரர் இந்த நாவலின் ஆசிரியர் திரு வோல்ட்டேர்.

No comments:

Post a Comment