Search This Blog

Thursday, November 8, 2012

இரகசியம்


புத்தகத்தின் பெயரே கவர்ச்சியா இருந்ததால படிக்க ஆரமிச்சேன்.
திரு. ரோண்டா பைர்னி எழுதிய The Secret என்ற ஆங்கில புத்தகம் திரு. பி.எஸ்.வி பொன்னுச்சாமி என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

இதுவரை நமக்கு நடந்தது, நடக்கிறது இனி நடக்கப் போவது என்பது எல்லாமே வேறொருவரால் தீர்மானிக்கப்பட்டதல்ல. இதை நாம்தான் தீர்மானித்தோம். இந்த இரகசியத்தை புரிந்து கொள்வதால் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கலாம். அதை எப்படி தீர்மானிப்பது, என்னவெல்லாம் செய்ய வேண்டும், இரகசியத்தை எப்படி கையாள்வது என்பதை ஆழமா விவாதிக்கும் புத்தகம். எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் என்பது எவ்வாறு ஒன்னுடன் ஒன்று தொடர்புடையது அதை சீரமைப்பது பற்றி விளக்கமா சொல்லிருக்காங்க. நிறைய மனோதத்துவ விஞ்ஞானிகள் கலந்து எழுதிய புத்தகம் என்பதால படிக்கிறதுக்கு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். புத்தகத்தை முழுசா படிச்சி முடிச்சிட்டாலே சாதனைதான்.

இந்த புத்தகத்தை படிக்கும்போது, 30 நாட்களில் முன்னேறுவது எப்படி வகை புத்தகங்களை படிப்பது, புதிய மதத்திற்கான சுவிஷேசம், மாய உலகத்தில் மிதக்க வைக்கும் முயற்சி போன்ற எண்ணங்கள் எழலாம். ஆனால் பாதி புத்தகத்தை தாண்டின உடனே அந்த எண்ணம் மறைஞ்சிடும். மனோதத்துவத்தைப் பற்றி பேசுறதால இந்த புத்தகத்தில் சொல்லப் பட்டதையும் என் வாழ்வில் நடந்த விசயங்களையும் ஒப்பிட்டுப பார்த்துக்கொண்டே படிச்சேன். ஒத்துப் போகல :)) ஆனா இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிற மாதிரி நடந்தா சந்தோசம்தான். :))

பின் குறிப்பு:
* முதல் 16 பக்கத்தில் ராஜாதி ராஜ, ராஜ குலத்துங்க, ராஜ பராக்கிரம வகையறாக்கள்தான். அதனால அதை அப்படியே தவிர்த்திடலாம்.
*17 லிருந்து 62ம் பக்கம் வரை படிச்சிட்டா புத்தகத்தோட கான்செப்ர் என்னான்னு முழுசா தெரிஞ்சிடும்.
* திருமணமானவங்களுக்கு 131ம் பக்கம் முதல் உதவலாம் :))

இரகசியத்தை செயல்படுத்த முடியுமான்னு தெரியல :))

No comments:

Post a Comment